Total Pageviews

Wednesday, 7 September 2011

தில்லியில் குண்டுவெடிப்பு - கூற விழையும் செய்தி என்ன?

  இன்று காலை 10 மணி அளவில் தலைநகர் தில்லியில் முக்கியமான உயர்நீதிமன்ற வாயில் அருகில் குண்டு வெடித்ததாகவும் அதனால் 9 பேர் பலி 47 பேர் படுகாயம் என்ற தொரு செய்தி வந்துள்ளது...



    இதனால் நாம் உணர வேண்டியதாக இருப்பது இன்னும் நாம் தீவிர வாதம் எனுமொரு நச்சினை கிள்ளி எறியவில்லை என்பதே ஆகும்.

 எதிரிகளை கொண்ட தொரு நாடு ஒரு நல்ல நாடாக இருக்க முடியாது இந்தியாவிற்கு காஷ்மீர் வடிவில் ஒரு எதிரி... ஊடுறுவல்கள் வெடிகுண்டு கலாச்சாரம் என எங்கும் தீவிரவாதம் பரவிவிட்டது.

தலைநகரின் மையப்பகுதியிலேயே குண்டுகளை வைக்குமளவு ஊடுருவி இருக்கிறார்கள் என்றால் இது வெறும் கண்கட்டு வித்தையா அல்லது இந்தியாவினை ஒரு கபலிகரம் செய்யப்போகிறோம் என்றதொரு மிரட்டலின் வெளிப்பாடா என்பதனை நாம் தான் ஊகிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை அசம்பாவிதங்கள் நிகழும் போதும் உளவுத்துறை ஏற்கனவே தகவல் கூறியது என மத்திய மந்திரி பதிலளிப்பது வாடிக்கையாகிவிட்டது .. இந்த தடவை மும்பைத் தாக்குதலின் பின்தான் தீவிரவாதிகள் நாட்டில் ஊடுருவிவிட்டனர் என கடந்த கால வரலாறின் மீது பாரத்தை ஏற்றி தப்பிக்க முயல்கிறார் மத்திய அமைச்சர்...


என்னதான் இருந்தாலும் நமது நாடு என்ற எண்ணமே குண்டுகள் வெடிக்கும் போதுதான் நமது நெஞ்சின் ஓரம் கொஞ்சம் வந்துவிட்டு செல்கிறது மொழி வேறுபாடுகளை கடந்து...

3 comments:

  1. The people around me are all enemies. What does it mean? I am bad.samy.

    ReplyDelete
  2. கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. கமென்ட் மாடரேஷன் வைத்திருந்தால் word verification தேவையிருக்காது.

    ReplyDelete